நாடளாவிய ரீதியில் உள்ள 75 விகாரைகளுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.

Share Button

நாடளாவிய ரீதியில் உள்ள 75 விகாரைகளுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கையர்கள் அனைவருக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் 10 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக விகாரைகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் அரச காணிகளில் அமைந்துள்ள விகாரைகளுக்கு 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் 355 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 700 விகாரைகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *