பொதுக் கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடு.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைப்பதில் சின்னம் தொடர்பான பிரச்சினை இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு அமைக்கப்படுவதாயின், சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொது சின்னம் அவசியம் என அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அர்ப்பணிப்புக்களை செய்துள்ளதாக அவர் கூறினார். கட்சியிலிருந்து விலகி, வேறு கட்சிகளை மேம்படுத்தும்; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *