யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சி சிறந்த முறையில் நிறைவு.

Share Button

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் இறுதிநாள் நேற்றாகும்;. கடந்த சில தினங்களாக இடம்பெற்ற இந்தக் கண்காட்சியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொழில்துறையில் ஈடுபடுபவர்கள் கடன் பெறுவதற்காக தம்மை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களுக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கும் இலகுவாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா  வேலைத்திட்டத்தின் மூலம் கடனுதவிகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு கட்டமாக சுயதொழிலை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *