பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம்.

Share Button

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நிறைவடைந்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பின்போது அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *