அரசியல் அதிகாரம் கொண்டவர்களும், சட்டவிரோத வியாபாரிகளுமே சூழல் மாசடைவிற்கு காரணம் என ஜனாதிபதி கூறுகிறார்.

Share Button

இலங்கையில் போன்றே ஏனைய உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரிகளுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைத்; தெரிவித்தார்.

‘பேண்தகு’ மானிட, சமூக மற்றும் சுற்றாடல் இருப்பினை உறுதி செய்வதற்கு மனிதனுக்கும் சுற்றாடலுக்கும் இடையிலான சமநிலையை பேண வேண்டியது மிக முக்கியமான தேவைப்பாடாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ செயற்பாட்டில் மிக முக்கிய பணி ஆசிய பசுபிக் வலயத்தின் அயன மண்டல நாடுகளில் வசிக்கும் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்ப் பல்வகைமையுடைய, தனித்துவமான, தேசத்திற்குரித்தான பெருமளவிலான தாவரங்களும் விலங்குகளும் இவ்வலயத்தில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும் என ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட வனாந்தரங்கள் ஒன்றிணையும் வகையில் வன வளர்ப்பில் ஈடுபடுவதனூடாக குறித்த வனாந்தரப் பகுதிகள் மீண்டும் இணைந்து அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்பு உறுதிசெய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாத்து தனித்துவமான அரிய வகை தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்தல் எதிர்காலத்திற்கான எமது இன்றைய கடமையாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *