ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் 9ஆம் திகதிக்கும், டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

Share Button

ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை நடத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தினங்களிலோ, போயா நாட்களிலோ தேர்தலை நடத்த முடியாது. போயா தினத்திற்கு முந்தைய தினத்திலோ, போயா தினத்திற்கு மறுதினமோ தேர்தலை நடத்தவும் முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிதாக எட்டு லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். தேர்தல் காலப்பகுதியில் ஊடகங்கள் சுய ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதுபற்றி ஊடகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் எந்த வேட்பாளருக்கும் பொருட்களை பகிர்தளிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *