பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை மீண்டும் கண்டறியுமாறு அரசாங்கம் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவுறுத்தல்.

Share Button

பாகிஸ்தானில் விளையாடுவதற்காக புறப்பட்டு செல்வதற்கு முன்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீண்டும் கண்டறியுமாறு அரசாங்கம், கிரிக்கட் கட்டுப்பாட்டு நிலையத்தை அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பிரதமர் அலுவலகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்கும் கிரிக்கட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைமை தாங்குகிறார். ட்வென்ரி ட்வென்ரி அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்கவுள்ளார். இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளையும், மூன்று ட்வென்ரி ட்வென்ரி போட்டிகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *