காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு முன்வருமாறு பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை.

Share Button

காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு முன்வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உலக நாடுகளை கோரியுள்ளார். இந்த விடயத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் அணுவாயுத யுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னைய பாகிஸ்தான் பிரதமர்களை போன்றே தானும் காஷ்மீர் விடயத்தில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் தற்போதைய நிலைமைகள் திடீரென யுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்தை ஏற்படுத்தலாம் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி எச்சரித்துள்ளார். இதனால், சர்ச்சைக்குரிய பகுதிக்கு விஜயம் செய்யுமாறு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிக்கேல் பெச்லட்டை வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், எதுவும் ஏற்படலாம் என குரேஷி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இணைவாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முரண்பாட்டை இருதரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்கான சாத்தியப்பாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கு ஒரு பல்தரப்பு மன்றம் அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் தேவை என பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இது இந்தியாவின் உள்விவகாரம் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11