இலங்கைக்கும், டோகோ நாட்டுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இணக்கம்.

Share Button

இலங்கைக்கும், டோகோ நாட்டுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இணங்கியுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், டோகோ ஜனாதிபதி பவுரே எசோசிம்னாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த உறவுகள் குறித்து அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் முன்னணி வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றில் இன்றைய தினம் தான் பங்கேற்பதாக டோகோ ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

இன்றைய தினம் புதிய முதலீடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட டோகோ ஜனாதிபதி, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். ஆபிரிக்கப் பிராந்திய நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *