அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் 82 சதவீதமான பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன.

Share Button

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஊழல்கள், முறைகேடுகள் என்பன இடம்பெற்றிருந்தால், அது பற்றி முறைப்பாடு செய்ய முடியும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 0112786786 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும். எழுத்து மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க விரும்புவோர் பிரதம செயற்றிட்ட பொறியியலாளர், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அலுவலகம், ஏழாவது மாடி, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்க முடியும். 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான 65 சதவீதமான தொகை உரிய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. 82 சதவீதமான பணிகள் தற்சமயம் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-03 | 18:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,710
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 863
புதிய நோயாளிகள் - 27
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 66
நோயிலிருந்து தேறியோர் - 836
இறப்புக்கள் - 11