கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
செப்டெம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 63 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 45 ஆயிரத்து 582 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஒன்பதாயிரத்து 302 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவே ஒரு மாதத்தில் பதிவாகிய அதிகளவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையாகும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.