என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா ஐந்தாவது நடமாடும் வேலைத்திட்டம் களுத்துறையில் ஆரம்பம்

Share Button

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஐந்தாவது நடமாடும் சேவை களுத்துறை மாவட்ட பொது விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது. இன்று முற்பகல் ஆரம்பமான இந்த நடமாடும் சேவைக்காக நிதி அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகள் தமது சேவையை வழங்குகின்றன.

 

வேலைத்திட்டம் தொடர்பிலான தெளிவை பெறவும், சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் பெருந் திரளான மக்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேலைத்திட்டம் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் நாளையும் தொடரவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *