ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் வேலைத்திட்டத்திற்குக் கிடைக்கும் சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் பதில் வழங்கப்படவுள்ளது

Share Button

ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை குறித்த தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், சில அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் பிரச்சினைகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் உதவி செயலாளர் அருணி சோமரட்ன தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு முன்வைப்பதற்காக ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் வேலைத்திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் வேலைத்திட்டத்திற்குக் கிடைக்கும் சகல பிரச்சினைகளுக்கும் விரைவில் பதில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *