கொழும்பு நகர அபிவிருத்திக்காக விரைவானதும், வினைத்திறனானதுமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
கொழும்பு நகர அபிவிருத்திக்காக விரைவானதும், வினைத்திறனானதுமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு அரசாங்கமும் செய்யாததை தற்போதைய அரசாங்கம் செய்திருக்கின்றது. மாளிகாவத்த, தெமட்டகொட, கிரிபத்கொட, கொலன்னாவ மற்றும் கிருலப்பனை பகுதிகளில் புதிய வீடமைப்புத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். அவற்றை மையப்படுத்தியதாக பாடசாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள் என்பனவும் அமைக்கப்படும் எனவும் இவை கொழும்பின் உபநகரங்களாக இணைக்கப்படும் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.