ஆறுகளின் நீர்மட்டம் துரிதமாக அதிகரிப்பு – நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்
நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெற்றுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மாகாணங்களில் 150 மில்லிமீற்றரை தாண்டி மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி எமது நிலையத்திடம் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் நீடிக்கும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் அடைமழை பெய்யக்கூடும். மழை பெய்கையில் காற்றின் வேகம் சடுதியாக அதிகரித்து கடல் கொந்தளிப்பானதாக மாறக்கூடும். இது குறித்து மீனவர்களும், கடல்போக்குவரத்தில் ஈடுபடுவோரும் கவனம் செலுத்த வேண்டும் என திரு.கொடிப்பிலி கோரிக்கை விடுத்தார்.