மழையுடன் கூடிய காலநிலை தொடர்கிறது – பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.

Share Button
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம்.
இதேவேளை, பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல ஓயாவின் தூனமழே பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ் நிலப் பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. களனி கங்கை மற்றும் களுகங்கையின் நீர் மட்டமும் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடைந்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. கற்கள் உருண்டு விழும் ஆபத்துக் காணப்படுவதால் பதுளை சொர்ணத்தோட்ட பிரதேசத்தில் 23 குடும்பங்களைச்
சேர்ந்த 88 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குருநாகல், பன்னல மாக்கதூர பிரதேசத்தில் கடும் மழையுடன் நேற்று வீசிய கடுங்காற்றுக் காரணமாக சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மூன்று பேர் வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, நுவரேலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை இன்று பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *