சிலாபம் பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த எட்டு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

Share Button

சிலாப பொலிஸ் பிரிவுடன் இணைந்ததான லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட எட்டு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வென்னப்புவ பிரதேசத்தின் விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாத்தாண்டிய உதவி பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திற்கு கிடைத்த தகவலையடுத்து மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6ஆம் திகதி வென்னப்புவ பிரதேச விடுதியொன்றில சூதாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேரை மாத்திரமே தடுத்து வைத்து, ஏனையோரை விடுவித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நாத்தாண்டிய உதவி பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *