இந்த முறை உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன

Share Button

இந்த முறை உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்களை பயனாளிகளிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். உலக குடியிருப்பாளர் தினம் அக்டோபர் முதலாதம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *