அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Share Button

அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் சம்பள பிரச்சினை உட்பட கோரிக்கைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி நேற்று அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் சில தினங்களில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, முப்படையினர் உட்பட பாதுகாப்பு துறையினரின் விடயங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் அதில் கவனம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிலர் இராணுவ வீரர்களைப் பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது துஷான இந்துனில் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *