அமெரிக்காவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்திருப்பதாக தலிபான் தெரிவிப்பு

Share Button

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பினால் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தலிபான் அமைச்சின் தலைமைப் பேச்சாளர் ஷெர் மொஹமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அமைதிக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலிபான் அமைப்புடனான பேச்சுவார்த்தைகளை துண்டித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த ஒருவாரத்தின் பின்னர் தலிபான் சார்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, 18 வருட மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இந்த மாத ஆரம்பத்தில் இணக்கம் ஏற்பட்டது.

அதன்படி, கடந்த எட்டாம் திகதி, தலிபான் அமைப்பினரின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் கானி (யுளாசயக புhயni) ஆகியோரை ட்ரம்;;;ப் சந்திக்கவிருத்தார்.

எனினும் கடந்த 6ஆம் திகதி ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அமெரிக்க இராணுவ வீரர் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து தலிபான்களுடன் இனி எந்த பேச்சு வார்த்தைக்கும் இடமில்லை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11