காஷ்மீர் போராட்டத்தில் இணைவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை.

Share Button

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை ஜனாதிபதி க்ஷி ஜிங்பிங் சந்திக்கும்போது, காஷ்மீர் விவகாரம் பேசப்பட மாட்டாதென சீனா சமிக்ஞை காட்டியுள்ளது. இருவருக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் பிரதான பேசுபொருளாக இருக்க மாட்டாதென நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தியா ஆகஸ்ட் 5ஆம் திகதி லடாக் மாநிலத்திற்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கியதை சீனா விரும்பவில்லை. இந்த மாநிலத்தின் பொது எல்லைக்கு அப்பால் சீன தேசம் உள்ளது.

இதேவேளை, காஷ்மீர் போராட்டத்தில் இணைவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளார். காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைக்கு காரணம் காட்டுவதற்காக இந்திய அதிகாரிகள் காத்துக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், நாளை ஜேர்மனிக்கு செல்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு பாகிஸ்தான் விமானப்பரப்பை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு இந்தியா கோரியிருந்தது. இதனை பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்திருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரேசி தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2