ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் தினம் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Share Button

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் தினம் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 7ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணி வரையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதேதினத்தில் காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.30 வரை ஆட்சேப மனுக்களை தாக்கல் செய்யலாம். தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாள், அதாவது நாளை தொடக்கம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்காக 50 ஆயிரம் ரூபாவும், சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்காக 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *