தேர்தல்கள்; ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறது.

Share Button

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலை நடத்த தயாராகிறது. தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அனுப்பும் நடவடிக்கைளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அவசியமாகும். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான விண்ணப்பப் படிவங்களை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 2018ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். மற்றமொரு சுற்று கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். ஊடகங்களுக்கான வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இன்று முற்பகல் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்துவது அவசியமாகும். அடுத்த மாதம் 6 ஆம் திகதி பகல் 12 மணி வரை கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *