இந்தியப் பிரதமர் நாளை அமெரிக்கா பயணமாகின்றார்.

Share Button

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்காக ஏழு நாள் விஜயம் ஒன்றை நாளை ஆரம்பிக்கின்றார். இந்த நிலையில், நியூயோர்க்கின் ஹூஸ்ட்டனில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்வரும் 27ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திக்கவுள்ளார். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் கலந்துகொள்வார் என இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கொக்ஹெல் (ஏதையல புழமாயடந) குறிப்பிட்டுள்ளார். செப்டெம்பர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் 150ஆவது நினைவுதின நிகழ்விலும் மோடி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் தென்கொரிய ஜனாதிபதி, சிங்கப்பூர், நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரும் பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *