ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை தனக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தேசிய செய்திப் பத்திரிகை ஒன்றில் இன்று வெளியான செய்தியை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார்

Share Button

சபாநாயகர் கரு ஜயசூரிய, தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு எழுத்து மூலமான கோரிக்கை முன் வைத்துள்ளதாக பிரதான தேசிய பத்திரிகை ஒன்றில் இன்று வெளியாகியுள்ள செய்தி தவறானதென சபாநாயகர் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு பல தரப்புக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கரு ஜயசூரிய கடந்த 17 ஆம் திகதி பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் கொள்கை ரீதியான பல விடயங்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அது ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களம் இறக்குமாறு கோரும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல என சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *