காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு

Share Button

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் இருந்தபோது காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கவுள்ளது. தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சான்றுப்படுத்தும் அறிக்கையை முன் வைக்கும் குடும்பங்கள் இந்த இடைக்கால கொடுப்பனவு பெறத் தகுதி பெறுவர் என, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த சான்று பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் இடைக்கால கொடுப்பனவு வைப்பலிடப்படவுள்ளன. இழப்பீட்டு காரியாலயத்தினால் நஷ்டஈடு மற்றும் வேறு விதமான கொடுப்பனவுகள் கிடைக்கும் வரை குறித்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 656 குடும்பங்கள் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளன.

இதேவேளை சான்றிதழை விரைவாக வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில்,; ஒப்பந்த அடிப்படையில் மேலதிக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11