2020ஆம் ஆண்டில் இலங்கையை மிதிவெடி இல்லாத நாடாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

Share Button

இலங்கையின் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலோபாயத் திட்டம் உலகளாவிய ரீதியிலான சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகளை தடைசெய்வதற்கான உடன்படிக்கையின் கண்ணிவெடி அகற்றலுக்கான ஆதரவு பிரிவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தொடர்பான உலகளாவிய மாநாடு ஜோர்டானிலுள்ள அம்மானில் அண்மையில் இடம்பெற்றது.

மிதிவெடியால் ஏற்படுகின்றன இறப்புக்கள் மற்றும் பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இனங்காணுவதும் பாதிக்கப்பட்டவர்களின் வலிகளைக் குறைப்பதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

கண்ணிவெடி அகற்றும் திட்டத்தில் இலங்கை உலகளாவிய ரீதியில் வெற்றியை அடைந்த ஒரு நாடாகக் கருதப்படுகின்றது.

2020ஆம் ஆண்டில் இலங்கையை மிதிவெடி இல்லாத நாடாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநாட்டில் பங்குகொண்ட, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக நோர்வே அரசிடமிருந்து அமைச்சுக்கு, நிதியினைப் பெற்றுக்கொடுத்தார்.

பொது மக்களின் இறப்பு மற்றும் காயங்களை கணிசமான அளவு குறைப்பதற்கு கண்ணிவெடி இடர் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த தலையீட்டில் விசேடமாக யுனிசெப் மற்றும் ஏனைய ஐக்கிய நாடுகளின் முகவர்களிடம் இருந்து, உயர் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்ற குழுக்களான சிறுவர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் இதுதொடர்பில் தெளிவுப்படுத்த, சிறந்த ஆதரவு கிடைத்ததாகவும் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11