அவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Share Button

அவன்ட் காட் வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவன்ட் காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்குக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவன்ட் காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

எனினும், விடுதலை செய்வதற்குரிய ஆவணங்கள் முறையாக இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி அறிவித்திருந்தது.

அவன்ட் காட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை நடத்தி செல்வதற்கு அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்ப்பட்டுள்ள இந்த வழக்கு சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11