சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 600 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share Button

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 326 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 323 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 338 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 69 சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஜின் கங்கை பெருக்கெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையின் நீர்மட்டம் சற்று உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழையுடனான காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11