இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து தமது மக்களின் பாதுகாப்பிற்காக இணைந்து செயல்படவுள்ளதாக இந்திய – அமெரிக்கத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்

Share Button

இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து தமது மக்களின் பாதுகாப்பிற்காக இணைந்து செயல்படவுள்ளதாக இந்திய – அமெரிக்கத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்ட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றினர். உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் நாட்டை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையில் வலுவான, வளமான இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என பிரதமர் மோடி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11