தற்போதைய அரசாங்கம் பாரிய நிதியை கல்வித்துறைக்காக ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத தொகையை தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கல்வித்துறைக்கு ஒதுக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை கோட்டப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள செகல மகா வித்தியாலத்தின் கட்டடத்தொகுதியை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியனார். இதற்கென 75 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகள் கல்வி ரீதியாக வலுவூட்டப்படும் போது அவர்களது பிரச்சினைகளைப் போன்று நாட்டின் பிரச்சினைகளுக்கும் அவர்களால் தீர்வு காண முடியும். முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையின் அபிவிருத்திக்கு பாரிய தொகையை செலவிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விக்காக 60 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. சமூக விரோத செயற்பாடுகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை, 29 இலட்;சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட அலகர கஹட்ட-கஹாபிட்டிய பாடசாலையின் பிரதான மண்டபமும் கையளிக்கப்பட்டது. பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு பாடசாலை கட்டடம் பத்து மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.