நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாகிறது.

Share Button

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேகாலை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பிரதேசங்களுக்கும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதூவ, பத்தேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் ஒரு கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11