சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, துரித நிவாரணம்.

Share Button

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நிவாரணப் பணிகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், ஆபத்தான பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை அவர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது, நிதியை பிரச்சினையாக்கிக் கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அடைமழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. இதனால், முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சகல அமைச்சுக்களுடனும் தொடர்புகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது அவசியமாகும். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள காலப்பகுதியில் தடையின்றி, அனர்த்த நிலையை முகாமைத்துவம் செய்யவும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11