மழையுடன் கூடிய காலநிலை இன்றிரவு வரை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

Share Button

சீர்ற்ற காலநிலையினால் காலி, மாத்தறை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரத்து 815 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்களின் தலைமையில் முப்படை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், ஏனைய நிவாரண சேவை நிறுவனங்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 696 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 899 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலையம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக, 30 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 819 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

களுகங்கை – மில்லகந்த பிரதேசத்தில் சிறு அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜின் கங்கையை அண்மித்த பத்தேகம பிரதேசம் மற்றும் நில்வளா கங்கையை அண்மித்த பனாதுகம பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றிரவு வரை நீடிக்கம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீற்றராகக் காணப்படும். ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடல் பிரதேசம் மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னார் வரையும், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையுமான கடல் எல்லையில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீற்றர் வரை உயர்வடையும்.

கடற்றொழிலில் ஈடுபடுவர்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனர்;த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த இலக்கம் 117 ஆகும். 24 மணி நேரமும் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11