ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றி வரும் இலங்கை இராணுவ வீரர்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

Share Button

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றி வரும் இலங்கை இராணுவ வீரர்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்ப சர்வதேச சமாதான பணி திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகி வருகிறது.

ஐக்கிய நாடுகளின் 74ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவின் தலைவரான வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க ஐக்கிய நாடுகளின் சமாதான பணி திணைக்களத்தின் உப பொதுச் செயலாளருடன் இன்று கலந்துரையாடவுள்ளார்.

இராணுவ தளபதியாக லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து ஐக்கிய நாடுகளின் சமாதான பணி திணைக்களம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *