அரச சேவையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், அமைச்சரவை உபகுழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று.

Share Button

அரச சேவையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், அமைச்சரவை உபகுழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு, சகல தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை மற்றும் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, இன்றும், நாளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்;த்தை வெற்றியளிக்குமிடத்து, தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடத் தயார் என்று ரெயில்வே நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11