மக்களுக்கு காலம் முழுவதும் சேவையாற்றத் தயார் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளிப்பு.

Share Button

மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

காலி – எல்பிட்டிய தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வஜிர அபேவர்த்தன, பி.ஹரிசன், ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *