தற்போதுள்ள சுதந்திரத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்வரும் சில வருடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என பிரதமர் அறிவிப்பு.

Share Button

அடுத்து வரும் சில வருடங்கள் சமகால சுதந்திரத்தின் நீடிப்புக்கு மிக சவால்மிக்கவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். சமகால சுதந்திர வாழ்க்கை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும். அதனை கவனத்தில் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது. நேற்று அலரிமாளிகையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிட்டார். சமகால அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி வெள்ளைவான் கலாச்சாரத்தை இல்லாது ஒழித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11