ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டங்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சின்னமொன்றில் போட்டியிடுவதாக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்துச் செயற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், குருநாகல் மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வரலாற்றில் கட்சி பின்னடைவுகளைச் சந்தித்த சந்தர்ப்பங்களில்,  மக்கள்மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, கட்சியை மீட்சி பெறச் செய்ததாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு அவசியமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு அமைவாகவே அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11