முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் செபஸ்ரியன் குர்ஸ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி ஒஸ்ரியாவின் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் செபஸ்ரியன் குர்ஸ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி ஒஸ்ரியாவின் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கட்சி மொத்த வாக்களிப்பில் 38 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த முறை 31 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றது. இந்தக் கட்சியின் முன்னாள் கூட்டணி அங்கத்தவர்களான இடதுசாரி சுதந்திரக் கட்சி, 17 தசம் 3 வீத வாக்குகளைப் பெற்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. ஒஸ்ரிய அரசாங்கத்தின் மீதான ஊழல் ஏற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த இடைத்தேர்தல் இடம்பெறுகிறது.