கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க லங்கா சமசமாஜ கட்சி தீர்மானம்

Share Button

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார். அவரது வெற்றி தொடர்பில் அச்சமடைந்துள்ளவர்கள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று ராஜா கொல்லுரே கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அங்கு கருத்து வெளியிட்ட லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து கடன் தொகை அதிகரித்துள்ளதாக அங்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கமினிஸ்ட்டு கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகர தெரிவித்தார். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான தொல்லைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுப்பார் என்று அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11