காலநிலை மாற்றங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்து

Share Button

பெரு நகரங்களை பசுமை நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களை இலங்கை இனங்கண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான உலக புதுப்பிக்கக் கூடிய வலுசக்திகள் வலையமைப்பின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.

காலநிலை மாற்றங்களின் விளைவுகளையும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார். அரசாங்கம் ஆரம்பித்துள்ள பெருநகர திட்டங்கள் பசுமை நகரங்களாக அமைவது அவசியமாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் விரைவில் முக்கிய தொனிப்பொருளாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளது என்று அவர் கூறினார். அமைச்சர் பாட்டலி சம்பிக்க உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11