பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியினுள் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இந்த நிலையில் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.