சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சின் உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது

Share Button

சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சின் உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, குறித்த தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்கங்களுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரச துறையின் நிறைவேற்று தரத்திலுள்ள சகல அதிகாரிகளுக்கும் கொடுப்பனவை வழங்குவதற்கும், ரயில்வே சேவையை ஒன்றிணைந்த சேவையாக பிரகடனப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்கவும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *