சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது

Share Button

சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது.

யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட சீனா இன்று இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சந்தையாக இன்று காணப்படுகிறது.

இன்றைய 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் மிகப் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது. இந்த இராணுவ அணிவகுப்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி மாவோ சேதுங்கின் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உதயமானது. அதன் பின்னர் சீனாவின் வலிமை மிக்க தலைவராக தற்போதைய ஜனாதிபதி க்ஷீ ஜிங் பிங் கருதப்படுகிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *