எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சஜித் பிரேமதாஸவுடனும், கோட்டாபய ராஜபக்ஷவுடனும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த வேட்பாளர்களின் கட்சிகளிடமிருந்து கிடைத்த அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி தமக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை என்றும், நிறைவேற்றுக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பத்தோடும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.