கட்சியின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

Share Button

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடனேயே தமது கட்சி சில யோசனைகளை முன்மொழிந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைகளுக்கு இணக்கம் தெரிப்போருக்கு ஆதரவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் சனிக்கிழமை எடுக்கவிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். அரசியல் அமைப்பு தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொது சின்னம் ஒன்றை தெரிவு செய்வதில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11