பிள்ளைகளின் சுபீட்சத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் போசணை சுட்டெண்ணுக்கு அமைவாக, சிறுவர் பரம்பரையினர் போதிய போசாக்கு இன்றி வாழ்ந்து வருகின்றமை பாரிய பிரச்சினையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை தடுப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவிருக்கிறது. சிறுவர் உரிமை தொடர்பான சட்டத்திற்கு மேலதிகமாக பதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
சிறுவர் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவென ஒவ்வொரு மாகாணத்திலும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார். குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சியாளர்களையும் பாதுகாக்கும் அதிகாரசபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுஹத கம்லத், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். அவர் பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.