ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை, 17 பேர் கட்டுப்பணம் செலுத்தல்

Share Button

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நான்காம் திகதி நள்ளிரவு வரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனைக் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *