ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே, மோதல்

Share Button

ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 15 பேர் இதில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் சீனாவில் இடம்பெறும் வேளை, ஹொங்கொங்கில் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *